Monday 10 Jan 10:00:00 AM
🙏 ॐ श्री महापेरियवा शरणं 🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா சரணம்🙏 Om Sri Mahaperiva Saranam 🙏

ஸ்ரீரங்கராஜபுரம்

Welcome to Srirangarajapuram Village

Srirangarajapuram is a small village near Pandanallur where Renukujambal Sametha Sri. Pasupatheeswarar temple exists. The town of Pandanallur is well known for the traditional Bharatanatyam style.

This village has a population of about 800 people and consists of about 200 acres of agricultural land. Agriculture is the main source of livelihood for the villagers. Manniar is a tributary to the river Cauveri which flows around the village is the main source of water for irrigation.

Srirangarajapuram village houses an ancient Shiva temple by name Kusumakundalambiga Samedha Sri Edumbeswarar Swami on the eastern end of the village.

The western end of the village is abode to Sri Devi, Boo Devi Samedha Ranganathar Swami Kovil.

The Agraharam also houses a Mani Mandapam for Kanchi Kamakoti Maha Periva Swamigal. Mani-Mandapam exhibits the portraits of all the 70 Aacharyas of Kanchi Kamakoti Peetam.

ஶ்ரீரெங்கராஜபுரம் என்ற கிராமத்திற்கு மிக அருகாமையிலுள்ள பந்தநல்லூர் என்ற சிறிய நகரம் பாடல் பெற்ற ஶ்ரீஶ்ரீ ரேணுகுஜாம்பாள் ஸமேத ஶ்ரீஶ்ரீ பசுபதீஸ்வர ஆலயத்தாலும் பரதநாட்டியக்கலையின் வாயிலாகவும்  அறியப்படுகிறது .

சுமார் 800 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் 200 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. காவிரி ஆற்றின் துணை நதியான மன்னியாறு கிராமத்தைச் சுற்றி ஓடுகிறது. இது பாசனத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாகும்.

ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தின்  கிழக்கே ஆகமரீதியாக ஶ்ரீஶ்ரீ குசுமகுந்தலாம்பிகை ஸமேத ஶ்ரீஶ்ரீ இடும்பேஸ்வர ஸ்வாமிகளின் சிவாலயம் திருக்குளத்துடன் அமைந்துள்ளது.

அக்ரஹாரத்தின் மேற்கே ஆகமரீதியாக ஶ்ரீதேவி பூதேவி ஸமேத ஶ்ரீஶ்ரீ ரெங்கநாதப்பெருமாள் எழுந்தருளி பாவிக்கிறார்.

அக்ரஹாரத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீஶ்ரீ மஹாஸ்வாமிகளின் மடாலயம் உள்ளது. மணிமண்டபத்தில் ஶ்ரீஶ்ரீ பகவதபாதாள் ஶ்ரீஶ்ரீ ஆதிசங்கர ஸ்வாமிகளைத் தொடர்ந்து குருபரம்பரையைச்சார்ந்த 69 ஆச்சாரியர்களும் சித்திரரூபத்தில் எழுந்தருளி அருள் பாவிக்கிறார்கள்.